இந்த முருகர் கோவிலுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம்.. எப்படி பெறுவது?
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருதமலையில் அமைந்துள்ள மலைப்பாதையில் கார் உள்பட 4 சக்கர வாகனங்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து செல்ல அறங்காவலர் குழு சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அதன்படி, காலை 6 முதல் பிற்பகல் 1 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களும், பிற்பகல் 1 முதல் மாலை 6 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்கள் என நாள் ஒன்றுக்கு 300 நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.
இ-பாஸ் நடைமுறையில் ஆட்சேபனை இருந்தால் பொதுமக்கள் கோயில் அலுவலகத்துக்கு தபால் அல்லது இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் இ-பாஸ் இல்லாமல் வாகனங்கள் மலைப்பாதையில் அனுமதிக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ