இபிஎஸ் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.. .பரபரக்கும் அரசியல் வட்டாரம்!

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் மத்திய சென்னையில் தயாநிதி மாறன் போட்டியிட்டார். தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் பயன்படுத்தவில்லை எனக் கூறியிருந்தார்.ஈபிஎஸ் இதுதொடர்பாக மன்னிப்பு கேட்காவிட்டால் அவதூறு வழக்கு தொடரப்படும் என தயாநிதிமாறன் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர் மன்னிப்பு கேட்காததால், அவர் மீது அவதூறு வழக்கினை பதிவு செய்தார் தயாநிதி மாறன்.இந்நிலையில் அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. தொகுதி மேம்பாட்டு நிதி குறித்த ஈபிஎஸ் விமர்சித்ததை எதிர்த்து தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. உண்மைத்தன்மையை ஆராயாமல் எடப்பாடி பழனிசாமி பேசியது உண்மைக்கு புறம்பானது; எந்த ஆதாரங்களும் இல்லாமல் என்மீது அவதூறு பரப்பி உள்ளார் என மனுதாரர் தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!