பொதுமக்கள் உசிரோட விளையாடாதீங்க... அரசுப் பேருந்து தீவிபத்து குறித்து இபிஎஸ் கண்டனம்!

 
இபிஎஸ்
 நேற்று ஜூலை 2ம் தேதி சென்னை அடையாறில் மாநகர அரசு பேருந்தில் திடீர்  தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்  “சென்னை அடையாறில் மாநகர பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. அந்த விபத்தில் சமயோசிதமாக செயல்பட்டு அதில் உயிர் சேதம் ஏற்படாதவாறு துரிதமாக செயல்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
இந்த விடியா திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவில்லை.

அதே சமயத்தில்  பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாதது குறித்தும் நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது போன்ற சம்பவங்களில் நடவடிக்கை எடுக்காமல் மக்கள் உயிருடன் வாழும் விடியா திமுக அரசுக்கு என்னுடைய கண்டனங்கள்.  அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் உயிருடன் விளையாடாமல் பேருந்துகளின் தரத்தை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.  பழைய பேருந்துகளை பராமரிக்க வேண்டும். அதற்கு மாற்றாக விரைவில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சென்னை பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு மாநகரப் குளிர்சாதன பேருந்து இன்று (ஜூலை 2) அடையாறு டிப்போ அருகே எல்பி சாலையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, ​​பேருந்தின் கியர் பாக்ஸில் இருந்து திடீரென புகை வருவதைக் கண்ட டிரைவர், உடனடியாக பேருந்தில் இருந்து பயணிகளை இறக்கிவிட்டார்.

இதையடுத்து சில நொடிகளில் மாநகரப் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பரபரப்பான அடையாறு சாலையில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததையடுத்து, அந்த சாலையில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.  மாநகரப் பேருந்தில் தீப்பிடித்ததும்,  பேருந்தில் இருந்து பயணிகள் வேகமாக வெளியேறினர், அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் காயமின்றி உயிர் தப்பினர்.அடையாறு டெப்போ அருகே மாநகர பேருந்து தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web