லாக்கப் டெத் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் தொலைபேசியில் ஆறுதல் !

 
அஜித்


 
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த   அஜித்குமார்  குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.

திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணிபுரிந்தவர்  அஜித்குமார். இவர் , காவல்  நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணையின்போது, காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அஜித் லாக்கப் சிவகங்கை எஸ்.பி.

இந்தச் சம்பவத்தை அடுத்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார். அவர், “தைரியமாக இருங்கள், நீதி கிடைக்கும் வரை அதிமுக உங்களுக்கு துணை நிற்கும்” என உறுதி அளித்தார். இச்சம்பவத்தில், அவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சனம் செய்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?