இபிஎஸ் மனு தள்ளுபடி ... அதிமுக பொதுசெயலாளர் வழக்கு!

 
ஓபிஎஸ் இபிஎஸ்

 
எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக  தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  2022 ஜூலை 11ம் தேதி   நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த தீர்மானத்திற்கு எதிராக, கட்சி உறுப்பினர் சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஓபிஎஸ், இபிஎஸ் நியமனம் செல்லும்! ஐகோர்ட்டு அதிரடி!
இந்த தீர்ப்பு, இபிஎஸ்-இன் தலைமைக்கு சவாலாக அமைந்துள்ளது. நீதிமன்றம், அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று உறுதிப்படுத்தியது. “பொதுக்குழு மூலம் இபிஎஸ்-ஐ தேர்ந்தெடுத்தது, கட்சி விதிகளுக்கு எதிரானது,” என  தீர்ப்பு வழங்கப்பட்டது. 


  “அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களின் உரிமைகளை மீறி, பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது விசாரணைக்கு உரியது,” என நீதிமன்றம் தெரிவித்தது. இந்த தீர்ப்பு, இபிஎஸ்-இன் தலைமை பதவியை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. மேலும், இந்த வழக்கு ஓபிஎஸ் தலைமையிலான அணி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அறிவிப்பைத் தொடர்ந்து வந்துள்ளது. அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளுக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும்  நிலையில், இந்த தீர்ப்பு கட்சியின் எதிர்கால அரசியல் உத்திகளை பாதிக்கலாம்.  .

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?