எதிர்க்கட்சியாக இருந்தபோது கருப்பு பலூன்... ஆளுங்கட்சியானதும் வெள்ளைக்குடை ... இபிஎஸ் முதல்வருக்கு நெத்தியடி!

 
இபிஎஸ்


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி  நேற்று  செப்டம்பர் 17ம் தேதி  டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு முடிந்த பிறகு, தனியாக மற்றொரு காரில் முகத்தை கர்ச்சீப்பால் மூடியபடி சென்றார் .   தற்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்   “டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருந்து வெளியே வந்தபோது கர்சீப்பை எடுத்து முகத்தை துடைத்தேன்.

ஸ்டாலின்

டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அரசு வாகனத்தில்தான் சென்றேன். அதனை வீடியோவாக எடுத்து ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் குறித்து அவதூறாக செய்தி வெளியிடுவது சரியல்ல.இப்படி தரம் தாழ்ந்து அரசியல் செய்திருப்பது ஏற்புடையதல்ல. நான் உள்துறை அமைச்சரை சந்திப்பதாக முறையாக சொல்லிவிட்டு, அரசு காரில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் பகிரங்கமாகதானே சென்றேன், இதை ஏன் ஒரு முதலமைச்சர் விமர்சிக்க வேண்டும்? இனி ரெஸ்ட்ரூம் சென்றால்கூட, இந்த ரெஸ்ட்ரூம் போகிறேன் என்று சொல்லிவிட்டுதான் போக வேண்டும் என்ற அளவுக்கு செய்கின்றனர்” என வருத்தம் தெரிவித்தார்.

ஸ்டாலின்
அவர், ”திமுக ஆளுங்கட்சியான பிறகு, தாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது யாரையெல்லாம் விமர்சித்தார்களோ அவர்களையே ரத்தனக் கம்பளம் வைத்து வரவேற்றனர். பிரதமரை அழைத்து கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட்  நிகழ்ச்சிகளை நடத்தினர்.  எதிர்க்கட்சியாக இருந்தபோது கருப்பு பலூன் விட்டனர். ஆளுங்கட்சியானவுடன் வெள்ளைக்குடை பிடித்தனர். இதுதான் திமுக-வின் நிலைப்பாடு” என்று கூறினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?