ஜெயலலிதாவால் 10 ஆண்டுகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் டிடிவி தினகரன் ... இபிஎஸ் பதிலடி!

 
டிடிவி தினகரன்


 
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி   செப்டம்பர் 16ம் தேதி டெல்லியில்  உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில், அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். தம்பிடுரை, இன்பதுரை உடன் இருந்தனர்.  தேச விடுதலைக்காக போராடிய பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.  

சசிகலாவுக்கு அனுமதியில்லை! மகள் திருமணத்தை தள்ளி வைத்தார் டிடிவி தினகரன்!

இந்த சந்திப்பு முடிந்து இபிஎஸ் டெல்லியில் இருந்து சென்னை திரும்பியபோது, அவர் முகத்தை கைக்குட்டையால் மூடியபடி காரில் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படம், அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக வெடித்தது. உதாரணமாக, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்தார்.

எடப்பாடி இபிஎஸ்

தஞ்சாவூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், “இபிஎஸ் தன்மானம் பற்றி பேசுகிறார்,  டெல்லி சென்று அமித்ஷாவை திருட்டுத்தனமாக சந்தித்துவிட்டு, முகத்தை மூடிக்கொண்டு திரும்புகிறார். இது அதிமுகவின் சுதந்திரத்தை இழக்கச் செய்யும் செயல்,” என தினகரன் குற்றம் சாட்டினார். மேலும், “அமித்ஷா இபிஎஸ்ஸை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவில்லை, மாறாக திமுகவை எதிர்க்க பாஜகவின் ஆதரவு தேவை எனக் கூறினார்,” எனக் தினகரன் விமர்சனம் செய்தார்.
“நான் முகமூடி அணியவில்லை, டிடிவி தினகரன்தான் முகமூடி அணிந்து அதிமுகவில் நுழைய முயற்சித்தார். ஜெயலலிதாவால் 10 ஆண்டுகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் அவர். என்னைப் பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை,” எனக் கூறினார்.  “ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகே டிடிவி சென்னைக்கு திரும்பினார். கட்சி கட்டுப்பாட்டை மீறினால், செங்கோட்டையன் உட்பட யார் மீதும் நடவடிக்கை பாயும்,” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?