ஈரோடு: ‘நாம் தமிழர்’ சீமான் நீதிமன்றத்தில் ஆஜர்!

 
திமுக தான் சங்கி: மேடையில் செருப்பை கழற்றி விமர்சித்த சீமான்!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக, கடந்த பிப்ரவரி 13ம் தேதி ஈரோடு திருநகர் காலனியில் நடைப்பெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், அருந்ததியர் சமூகம்  குறித்தும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சீமானின் பேச்சு குறித்து தலித் அமைப்பினர் அளித்த புகாரின் பேரில்   சீமான் மீது  எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம், ஐபிசி 153B(1)(c) 505(1)(c), 506(1) உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

seeman

இந்த வழக்கு கடந்த மாதம் பதினொன்றாம் தேதி விசாரணைக்கு வந்த போது சீமான் நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது இந்த வழக்கில் பிணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கின் விசாரணையும், பிணை மனு மீதான விசாரணை நடத்தப்பட்டது.

seeman

இந்நிலையில் அருந்ததியர் சமுதாயத்தினர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தாக தொடரப்பட்ட வழக்கில்  சீமான் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராகினார். ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான சீமானின் வழக்கு வருகின்ற 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web