ஈரோடு... லிஃப்டில் சிக்கி துண்டான இடது கை... சிகிச்சை பலனின்றி பலியான முதியவர்!

 
லிப்ட்

ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே வசித்து வருபவர் சுப்பிரமணி. இவர் அதே பகுதியில் இஸ்திரி பணி செய்து வந்தார். இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றினுள், வழக்கம் போல குடியிருப்பில் விசிப்பவர்களிடம் அயர்ன் செய்வதற்காக துணிகளை வாங்க லிஃப்டில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சுப்பிரமணியின் இடது கை லிஃப்டில் சிக்கிக் கொண்டது. இதில் அவரது இடது கை துண்டானது.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் உடனடியாக சுப்பிரமணியனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Erode Taluk PS

இது குறித்து தகவலறிந்து வந்த ஈரோடு தாலுகா போலீசார், சுப்பிரமணி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web