விவசாயிகளே குறிச்சிக்கோங்க... ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை!
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் பயிரிடப்படுகிறது. அங்கு விளைந்த மஞ்சள்களை விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இந்த விற்பனைக்கூடம் பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தில் அமைந்துள்ளது.
ஈரோடு செம்மாம்பாளையத்தில் உள்ள மஞ்சள் மார்க்கெட் மற்றும் ஈரோடு, கோபி ஆகிய வேளாண்மை உற்பத்தியை கொண்டு செல்கின்றனர். அங்கு மஞ்சள்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.தமிழ்நாட்டு வியாபாரிகள் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் இந்த ஏலத்தில் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை வருவதால் அங்குள்ள மார்க்கெட் ஜனவரி 11 முதல் 19ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13 முதல் ஜனவரி 17ம் தேதி வரை மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜனவரி 11, 12 மற்றும் 18, 19 சனி, ஞாயிறு என்பதால் அந்த நாட்களில் மஞ்சள் ஏலம் நடைபெறாது. அதன் பின்னர் ஜனவரி 20ம் தேதி முதல் மார்க்கெட் வழக்கம்போல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!