நித்திய பலம்... பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து!

 
ரஜினி மோடி

நித்திய பலம் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நேற்றிரவு முதலே பிரதமர் மோடிக்கு பாஜகவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பிரதமர் மோடியின் வீடியோ, போட்டோக்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிறநாட்டின் தலைவர்கள், ஜனாதிபதி திரவுபதி முர்மு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிற மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், பாஜக தலைவர்கள் என பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில், “மிகவும் மதிப்பிற்குரிய, மரியாதைக்குரிய என் அன்பான பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நமது அன்பான தேசத்தை வழிநடத்தும் நித்திய பலம் கிடைக்க வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?