10வது பாஸான போதும்... மாதம் 69,000 வரை சம்பளம்... மத்திய அரசில் வேலை வாய்ப்பு... முழு விபரம்!

 
மத்திய அரசு வேலை

பத்தாவது வரை படித்து, தேர்வாகி இருந்தால் போதும். மாதம் 69,000 வரையில் சம்பளம் பெறலாம். அதுவும் மத்திய அரசில் வேலை வாய்ப்பு. மத்திய ரிசர்வ் காவல் படையில் 10வது தேர்வானவர்களை அடிப்படைக் கல்வி தகுதியாக கொண்டு காலியாக உள்ள 9,223 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டி.என்.பி.எஸ்.தேர்வுகளுக்கு நம் தமிழக இளைஞர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் அளவுக்கு மத்திய அரசு பணிகளுக்கு தயார்படுத்திக் கொள்வதில்லை. 

மாதந்தோறும் மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்புக்களுக்கான அறிவிப்பு வெளியாகி கொண்டே இருக்கிறது. ஆனால், இந்தியளவில் தமிழகத்தில் இருந்து அதிகளவிலான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்படுவதில்லை. எனவே மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க. மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎஃப் பிரிவில் காலியாக உள்ள 9,223 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: கான்ஸ்டபிள் (டெக்னிக்கல்/ட்ரேட்ஸ்மேன்) 

காலியிடங்கள்: 9212 (ஆண்கள் 9105, பெண்கள் 107) கான்ஸ்டபிள் (Pioneer)-11

CRPF

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிற்பிரிவில் போதிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்போர் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். எம்எம்வி பணிக்கு விண்ணப்பிப்போர் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.8.2023 தேதியின்படி 21 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100 

விண்ணப்பிக்கும் முறை: www.crpf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மகளிர் போலீஸ்

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2.5.2023 மேலும் விவரங்கள் அறிய www.crpf.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

ஒரு புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web