திருமணமாகி 15 வருடங்கள் ஆகியும் வெறி அடங்கல.. தங்கையின் உதவியுடன் மச்சானை பிளான் போட்டு தீர்த்துக் கட்டிய அண்ணன்!
தென்காசி மாவட்டத்தில் வசித்து வந்தார் சின்னத்துரை . இவர் புதூர் பகுதியில் பணியாற்றியபோது மாயா என்ற பெண்ணை சந்தித்து காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதும், கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதும் தெரிய வந்தது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு 2 மகன்கள், 1 மகள் என 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே சின்னத்துரை கடந்த சில ஆண்டுகளாக வேலை காரணமாக ராமேஸ்வரத்தில் தங்கி உள்ளார்.

ஒரு வருடத்தில் 3 முறைதான் ஊருக்கு வந்திருக்கிறார். தனியாக இருந்த மாயா, 3 குழந்தைகள் பிறந்ததும் தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இவர்களது வீட்டின் அருகே தனி வீட்டை வாடகைக்கு எடுத்து குழந்தைகளுடன் தங்கியிருந்தார். சின்னதுரை தான் சம்பாதித்த பணத்தை எப்பொழுதும் வீட்டிற்கு செலவுக்கு அனுப்பும் அன்பானவர். அதற்குள் மனைவி கணவனை தொடர்பு கொண்டு மகளிர் சுயஉதவி கமிட்டியில் கடன் வாங்க உங்கள் கையெழுத்து தேவைப்படுவதால் ஊருக்கு வருமாறு கூறினார்.
சம்பவத்தன்று மனைவி கூறியதை கேட்டு கணவன், ஊருக்கு வந்ததால் வீட்டில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சின்னத்துரையை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற மனைவி, கணவரின் சகோதரி வீட்டுக்கு எடுத்துச் சென்று, மர்ம நபர்கள் சிலர் கணவரைத் தாக்கியதாகக் கூறினார். சின்னத்துரையின் தலையில் ரத்தம் வழிவதைக் கண்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சின்னத்துரையின் மரணத்தை உறுதி செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிகாரிகள் மாயாவிடம் விசாரணை நடத்தியபோது, முதலில் முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளித்த அவர், பின்னர் தனது கணவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் கொலை செய்ததாக கூறினார். அவரது பேச்சில் தொடர்ந்து அவதூறுகள் இருப்பதை உணர்ந்த அதிகாரிகள் மாயாவையும் அவரது சகோதரர் மனுவையும் விசாரித்தனர். அப்போது கொலைக்கான காரணம் தெரியவந்தது.
அதாவது சின்னதுரை - மாயா திருமணத்தில் மாயாவின் அண்ணன் சம்மதிக்கவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தாலும், தற்போது வரை கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக சின்னத்துரை வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருவது தெரிந்தது. இதனால் தன் தங்கையின் வாழ்க்கை சீரழிந்துவிடக் கூடாது என்று எண்ணி, வேறு ஒருவரைக் கண்டுபிடித்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். அவரிடம் பேசிய தங்கையும் மனம் மாறியதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கணவனை வீட்டுக்கு வரவழைத்த மனைவி கணவனுடன் தகராறு செய்துள்ளார்.

வாக்குவாதத்தில் மாயாவும், மனுவும் சின்னத்துரையை கம்பியால் அடித்துக் கொன்றனர். அப்போது சடலத்துடன் சுமார் 5 மணி நேரம் ஊர் சுற்றி வந்தவர்கள் இறுதியில் சின்னத்துரையின் தங்கை கலா வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. அந்த விசாரணை நடந்து வருகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
