நம்பிக்கையெல்லாம் நாசமா போச்சே!! 359கி தங்கம் , 10 ஐபோனுடன் ஊழியர் மாயம் !! கதறும் உரிமையாளர்!!

 
ஐபோன்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை  ஒரு அலுவலகத்தில் பணியில் சேர்ந்து விட்டால் வாழ்வின் இறுதி வரை அதே அலுவலகம் தான். தனியார் கம்பெனி என்றாலும் முதலாளிக்கு விசுவாசமாக இருப்பர். அவர்களின் குடும்ப தேவைகளை முதலாளி கவனித்து உதவி செய்வார் . இப்படி தான் பெரும்பாலானோர் வாழ்க்கைமுறை இருந்து வந்தது  ஆனால் இப்போதைய நிலைமை அப்படி இல்லை. அதிலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அவரவர் சௌகர்யம் மட்டும் தான் முக்கியம். பிடிக்கலன்னா தூக்கி போடு ஒரு ரூபா சம்பளம் அதிகம் தர்றேனா கம்பெனி மாறிடு என்பது தான் கொள்கையாக இருந்து வருகிறது. நம்பிக்கை, நாணயம், உண்மை இவையெல்லாம் கடந்து போன காலங்களாகி விட்டன

சென்னை அசோக்நகர் முதல் தெருவில் சாகுல் அமீது என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சாகுல் அமீது தனது வீட்டின் கீழ் தளத்தில் பழைய தங்க நகைகள் மற்றும் செல்போன்கள் வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், புதுக்கோட்டையை சேர்ந்த லமுனா மரைக்காயர்(28) என்பவர் சிறு வயதில் இருந்தே பணிபுரிந்து வந்துள்ளார்.

ஐபோன்

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலையை விட்டு நின்ற லமுனா மரைக்காயர், மீண்டும் சாகுல் அமீதுவிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் மீது ஏற்கனவே இருந்த நம்பிக்கையில் சாகுல் அமீது மீண்டும் வேலைக்கு சேர்ந்துக்கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் சாகுல் அமீது, 359 கிராம் நகைகள் மற்றும் 10 ஐபோன்களை லமுனா மரைக்காயரிடம் கொடுத்து பர்மா பஜாரில் உள்ள கடையில் கொடுத்துவிட்டு வருமாறு கூறியுள்ளார்.

இதுபோன்று ஏற்கனவே பணியில் இருந்தபோதும் கொடுத்து அனுப்பியுள்ளார். அப்போதெல்லாம் சரியாக செய்துமுடித்த லமுனா மரைக்காயர், இந்தமுறை பர்மா பஜார் செல்லாமல், நகை மற்றும் செல்போன்களை எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஐபோன்

இதனிடையே, நகை, செல்போன் குறிப்பிட்ட கடைக்கு சென்றடையவில்லை என தெரியவந்தது. லமுனாவை தொடர்புகொண்டபோது செல்போன் எடுக்கவில்லை என்பதால் சாகுல் அமீது சந்தேகம் அடைந்தார். பின்னர் இதுகுறித்து சாகுல் அமீதின் மகன் முஸ்தாக் அகமது(19) அசோக் நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் லமுனா மரக்காயரைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 

From around the web