இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி ... எவரெஸ்ட் மீன் மசாலாவில் பூச்சிக்கொல்லி மருந்து... விற்பனை செய்யத் தடை!

 
எவரெஸ்ட்

 நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் வீடுகளில் அம்மியில் அரைத்து வைத்த மசாலாவில் குழம்பு வைத்தனர். அதன் பிறகு நம்முடைய பெற்றோர் வீடுகளில் மசாலாப் பொருட்களை சேர்த்து ரைஸ்மில்களில் அரைத்து பயன்படுத்தி வந்தனர். நம் தலைமுறை ரெடிமேட் மசாலாக்களை பயன்படுத்தி குழம்பு, பொரியல் செய்கிறோம். அடுத்த தலைமுறை வீட்டில் சமைப்பதையே தவிர்த்து ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகிறது.


 

இந்நிலையில் பிரபல மசாலா நிறுவனமான எவரெஸ்ட் மசாலா தயாரிப்புக்களில் பூச்சிக்கொல்லியின் அளவு அதிகமாக இருப்பதாக கூறி அதற்கு  சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் "எத்திலீன் ஆக்சைடு அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் இருப்பதால், எவரெஸ்ட் மீன் கறி மசாலாவை இந்தியாவிலிருந்து திரும்பப் பெற ஹாங்காங் உணவு பாதுகாப்பு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது" என சிங்கப்பூர் உணவு ஆணையம்  தெரிவித்துள்ளது.

மீன் மசாலா


அத்துடன் “சம்பந்தப்பட்ட தயாரிப்புகள் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்டதால், சிங்கப்பூர் உணவு நிறுவன  இறக்குமதியாளர்  எஸ்பி முத்தையா & சன்ஸ் நிறுவனம்  தனது தயாரிப்புகளைத் திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என அந்த அறிவிப்பில்   கூறப்பட்டுள்ளது.எத்திலீன் ஆக்சைடை உட்கொள்வது நீடித்த  உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்தியர்கள் அதிகம் வசித்து வரும்  சிங்கப்பூரில், அவர்களது பயன்பாட்டுக்கான, இந்தியாவில் தயாரான மசாலா தயாரிப்பு ஒன்று தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றை உடனடியாக  திரும்பப்பெற உத்தரவிடப்பட்டுள்ளதும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web