”தி கேரளா ஸ்டோரி” படத்தை அனைவரும் பாருங்க!! ஆளுநர் சர்ச்சை பேச்சு!

 
தமிழிசை

இந்தியா முழுவதும் “தி கேரளா ஸ்டோரி ” திரைப்படத்திற்கு பெரும் கண்டனக் குரல்களும், சர்ச்சைகளும் கிளம்பியுள்ளது. வெளியிட தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் தடையிடமுடியாது எனத் தெரிவித்த நிலையில் மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தில் வெளியிட முடியாது என தெரிவித்தவர்கள் மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படத்தை திரையிட்டனர். பலரும் படத்தை தடை செய்யவேண்டும் என்றும், பலரும் படத்திற்கு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.

தி கேரளா ஸ்டோரி

ஆனால்  தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் ”கேரளா ஸ்டோரி”  படம் குறித்து  பேசியுள்ளார். அதில்  “இந்த கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நான் பார்க்கலாம் என்று நினைக்கிறேன் படம் ஐஎஸ்ஐஎஸ் எதிராக இது சித்தரிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அதற்கு யார் ஆதரவாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு எதிரானது என்று நினைப்பார்கள்.  தீவிரவாதத்திற்கு எதிரானது என்று நினைத்தால் நமக்கு ஆதரவான படம் என்று நினைப்பார்கள் அது அவரவர்களின் மன நிலையை பொறுத்தது.

the kerala story
பிரதமர் மோடி சொன்னது போல தீவிரவாதம் எந்த இடத்தில், எந்த ரூபத்தில் வந்தாலும் அது ஒத்துக்கொள்ள முடியாது.  ’தி கேரளா ஸ்டோரி’ படம் பெண்களையும், இளைஞர்களையும் பாதிக்கும் எனில்  அதன் உண்மை தன்மையை அறிய வேண்டும். தீவிரவாதத்தைப் பற்றி கேரளாவில் சட்டமன்றத்திலேயே பேசப்பட்டிருக்கிறது. திரைப்படம் பார்ப்பது ஒன்றும் தவறில்லை. வேண்டிய கருத்தை வைத்து படம் எடுத்தால் கருத்து சுதந்திரம். சொல்ல வேண்டிய கருத்தை வைத்து எடுத்தால் கருத்து சுதந்திரம் கிடையாது. உடனே தடை செய்வீர்கள்.  எல்லாரும் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும்.  நாங்க எல்லாம் பார்க்க போகிறோம். உண்மை தன்மை எங்கு இருந்தாலும் அதனை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து” என ஆளுநர் ஆவேசமாக பேசியுள்ளார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web