EVM இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு....24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு!

 
வாக்குப்பதிவு இயந்திரங்கள்

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்தியா முழுவதும் 102 தொகுதிகள் 21 மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில் சென்னையில்  தேர்தல் நடத்தும் அலுவலர் ராதாகிருஷ்ணன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  சென்னையில் வாக்குப்பதிவு  இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வடசென்னையில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியிலும்,  மத்திய சென்னை வாக்குப்பெட்டிகள் சென்னை லயோலா கல்லூரியிலும்  வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் 24 மணி நேரமும் 100க்கும் மேற்பட்ட கேமராக்கள் மூலம்  கண்காணிக்கப்பட்டு வருகிறது.  48 லட்சம் வாக்காளர்களில் 56 சதவீதம் பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். கட்டுப்பாடு அறையை திறக்க 2 சாவிகள் தேவைப்படும் வகையில் லாக்குகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில்  ஒரு சாவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடமும் மற்றொரு சாவி மாவட்ட அளவிலான தேர்தல் அதிகாரியிடமும் கொடுக்கப்பட்டிருக்கும்.

வாக்குப்பதிவு இயந்திரம்

பூத் சிலிப் கொடுக்கப்படாதவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள்  விடுபட்டதற்கு பழைய பட்டியலை வழங்கி இருக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும். 2019ல் பதிவான வாக்குகளை காட்டிலும் நேற்று   பெரும்பாலான தொகுதிகளில் 4 சதவீதம் வரை வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை உட்பட நகர்ப்புறங்களில் மக்கள் வாக்களிப்பதில் மந்தமான நிலையே நிலவி வந்துள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவு  குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் சென்னையில் வாக்கு சதவீதம் குறைந்திருப்பது கவலையை அளிக்கிறது எனக் கூறியுள்ளார்.  

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web