முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் கைது... பரபரக்கும் காவல்துறை வட்டாரம்!
முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் பெண் எஸ் பி-யிடம் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ராஜேஷ் தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் , ரூ20500 அபராதமும் விதிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் இந்த தண்டனையை உறுதி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி உச்ச நீதிமன்றம் ராஜேஷ் தாசை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்நிலையில் ராஜேஷ் தாசின் மனைவி பீலா வெங்கடேசன் ராஜேஷ் தாஸிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அத்துடன் பீலா தனது கணவர் மீது சென்னை கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள பீலாவின் வீட்டில் ராஜேஷ் தாஸ் 10 பேருடன் அத்துமீறி நுழைந்து வீட்டின் பூட்டை உடைத்ததாக அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது .
இதன் அடிப்படையில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.பீலா அளித்த புகாரின் பேரில் சென்னை கேளம்பாக்கம் போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பதாக விளக்கம் அளித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
