நான் செல்வது நேர்வழி ... முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசம்! நான் செல்வது நேர்வழி ... முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசம்!

 
செங்கோட்டையன்

கடந்த 45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நான் நேர்வழியில் சென்று கொண்டிருக்கிறேன். இது மாற்றுக் கட்சியை சார்ந்தவர்களுக்கும் தெரியும்.‌ நேற்றைய தினம் சட்ட அமைச்சர் ரகுபதி என்னை குறித்து கூறிய கருத்து வருத்தத்தக்க ஒன்று. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிந்து புரிந்து இது போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்க வேண்டும் . இதுதான் அவரைப் போன்ற அரசியல்வாதிக்கு உயர்வாக இருந்திருக்க வேண்டும். 

ரகுபதி
என்னைப் பொறுத்தவரை மற்றவரை கூட அரசியல் வாழ்க்கையில் குறை கூறாமல் என் வாழ்க்கை பயணத்தில் நேர்வழியில் சென்று கொண்டிருக்கிறேன். இந்த இயக்கத்திற்கு எப்பொழுது சோதனை வரும் பொழுது, இந்த தொண்டர்களுக்கு என்றைக்குமே நான் தூணாக நின்று செயலாற்று இருக்கிறேன் என தெளிவுபடுத்துகிறேன். 
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி , தேர்தலுக்குப் பிறகு அதிமுக பிளவுபடும் அது செங்கோட்டையின் தலைமையிலா அல்லது வேலுமணி தலைமையில் என தெரியவரும் என விமர்சனம் செய்திருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள எல்லப்பன் நகர் பகுதியில் அதிமுக சார்பாக தண்ணீர் பந்தல் சிறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீர் பந்தல் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார் 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web