61 வயதில் நீட் தேர்வு எழுதிய மாஜி வங்கி அதிகாரி... குவியும் பாராட்டுக்கள்!

 
சீனிவாசன்

நேற்று நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நடைப்பெற்ற நிலையில், சில சுவாரஸ்யங்களும் அங்கேறின. சேலம் மாவட்டத்தில் சக்தி கைலாஷ் கல்லூரி தேர்வு மையத்தில் நேற்று சேலம் சின்னதிருப்பதி பங்காளாதெருவைச் சேர்ந்த சீனிவாசன் (61) என்பவரும் நீட் தேர்வை எழுதினார். இவர் இந்தியன் வங்கியில் முதன்மை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு முடிந்து மாலை 6 மணிக்கு வெளியே வந்தவரிடம் நிருபர்கள் தங்களது பாராட்டுக்களைக் கூறி பேசினார்கள். அப்போது அவர், நான் மாணவராக இருக்கும் போது, ஹோமியோபதி மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அக்ரி படித்து முடித்து வங்கி பணிக்கு சென்று விட்டேன். இருந்தாலும் என்னுடைய ஆர்வம் காரணமாக தொடர்ந்து ஹோமியோபதி தொடர்பாக படித்து வந்தேன்.

இந்நிலையில், இந்த வயதிலும் ஹோமியோபதி மருத்துவத்தை முறையாக படித்து மருத்துவராக நீட் தேர்வு மூலம் வழி இருக்கிறது. அதனால் நீட் தேர்வை எழுதி, ஹோமியோபதி படிக்க ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக கடந்த 3 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தேன். தற்போது தேர்வை நல்ல முறையில் எழுதி முடித்திருக்கிறேன்” என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web