காதலியை துன்புறுத்திய முன்னாள் காதலன்.. ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர் செய்த கொடூரம்!
சேத்தன் சத்தீஸ்கரின் துர்க் பகுதியில் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரின் தாய்மார்களும் காவல்துறையில் பணிபுரிகின்றனர். பெண்ணின் தாயாருக்கு பணிமாற்றம் கிடைத்து தனது தாயுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு சந்தித்த லுகேஷ் சாஹு என்ற நபரை காதலித்து வந்தார். இதனால், சேத்தனின் அழைப்பை ஏற்க இளம்பெண் மறுத்துவிட்டார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், இளம் பெண் தனது தாயுடன் துர்க் பகுதிக்கு சென்றுள்ளார்.
இதையறிந்த சேத்தன் அந்த இளம் பெண்ணை தன்னை சந்திக்கும்படி வற்புறுத்தினார். ஆனால் அந்த இளம்பெண் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேத்தன், அந்த இளம் பெண்ணை துன்புறுத்தியுள்ளார். இதனால் விரக்தியடைந்த அந்த இளம்பெண் இதுகுறித்து லுகேஷிடம் கூறினார். இதையடுத்து லுகேஷ், தனது காதலியை சேத்தனை சந்திக்கும்படி கூறியுள்ளார். லுகேஷின் அறிவுறுத்தலின் பேரில், அந்த பெண் சேத்தனை தனது வீட்டிற்கு அருகில் உள்ள இடத்திற்கு அழைத்தார். பின்னர் லுகேஷ் தனது நண்பர்களுடன் அங்கு சென்றார்.
அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், லுகேஷும், அவரது நண்பர்களும் சேர்ந்து சேத்தனை கட்டையால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த சேத்தன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவம் குறித்து தகவல் பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!