குழந்தையின் பெயரை வெளியிடுவதில் மகிழ்ச்சி!! அட்லி ட்வீட்!!

 
அட்லி பிரியா

தமிழில்  வெற்றி பட இயக்குநர்களில் ஒருவர்  அட்லி. இவர் தற்போது  ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஜவான்  படத்தில் ஷாருக்கான் 2  வேடங்களில் நடித்து வருகிறார்.இதில்  ஹீரோயினாக நயன்தாரா நடித்து வருகிறார். தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உட்பட  பலரும்  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


அட்லியின் மனைவியான பிரியாவின்  வளைகாப்பில்  நடிகர் விஜய் கலந்து கொண்ட படங்கள் வைரலானது. இதில் இயக்குநர் அட்லி மற்றும் அவரது மனைவிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை குறித்து அட்லி  மற்றும் பிரியா இருவரும்  தமது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.  ஆனால் குழந்தையின் பெயரை இதுவரை வெளியிடவில்லை. இது குறித்து   ஷாருக் கான் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “ இயக்குனர் அட்லீ ஸ்மார்ட்  மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் நபர். அவரது மனைவி பிரியா சிறந்த உணவை எனக்கு அளித்தார். மேலும் அவர்களது புது வரவான அன்பான குழந்தை “மீர்” வருகை தந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.


இதே போல்  இயக்குனர் அட்லியின் மனைவி பிரியாவும் ட்வீட் செய்துள்ளார். அதில் “ எங்களது குழந்தையின் பெயரை தற்போது  வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரின் பெயர் மீர்” என தெரிவித்துள்ளார்.  “ உங்களது அன்பும் , பிரார்த்தனைகளும் எங்கள் குழந்தைக்கு வேண்டும்” என இதனை பதிவிட்டுள்ளார். ஷாருக்கான்  நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படத்தின் அப்டேட்டை  இயக்குனர் அட்லி அறிவித்துள்ளார்.  ‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web