அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்... 3 சக ஊழியர்களை சுட்டுக்கொன்று இளைஞர் தற்கொலை!

 
அமெரிக்கா
 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 21 வயதான ஜோஸ் ஹெர்னாண்டஸ் காலோ என்ற இளைஞர், தனது மூன்று சக ஊழியர்களை சுட்டுக் கொன்று விட்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா போலீஸ்

சனிக்கிழமை காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு வெடித்தபோது, அங்கு இருந்த மற்ற ஊழியர்கள் அச்சத்தில் ஓடிவிட்டனர். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று அந்தப் பகுதியை முற்றுகையிட்டனர். சில மணி நேரங்களுக்குப் பிறகு கடும் காயத்துடன் இருந்த குற்றவாளியை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அனுப்பியபோதும், அவர் உயிரிழந்தார்.

அமெரிக்கா

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளிச்சம் பார்க்கவில்லை. ஆனால் இது தற்செயலான சம்பவமல்ல என்று போலீஸ் அதிகாரி வில்லியம் மெக்மானஸ் தெரிவித்தார். சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!