நெல்லையில் பரபரப்பு... எரிந்த நிலையில் கிடந்த மனித எலும்புக்கூடு!

 
எலும்புக்கூடு கொலை போலீசார்

நெல்லையில் பாதி எரிந்த நிலையில் மனித எலும்புக்கூடு ஒன்று இருந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விசாரணைக்குப் பின்னர், உடல் அவசர அவசரமாக தீ வைத்து எரிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள இடுகாட்டில் நேற்று மதியம் உடலை நல்லடக்கம் செய்வதற்காக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்கு வெட்டவெளியில் தென்னை மட்டைகளைக் குவித்துப் போட்டு அதன் நடுவே மனித உடல் ஒன்று எரிந்து கொண்டிருந்தது.

உடனடியாக இது குறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில், இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த இடத்தை ஆய்வு செய்தனர். அந்த உடல் அவசர அவசரமாக தீ வைத்து எரிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

பள்ளி மாணவனை கடத்தி கொலை செய்த சக நண்பர்கள்

சம்பவ இடத்திற்கு சென்ற தடய அறிவியல் நிபுணர்கள், எலும்புக்கூடு எரிந்துக் கொண்டிருந்த இடத்தில் சில தடயங்களை சேகரித்தனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, யாராவது கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளனரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?