குட் நியூஸ்... இனி சுங்கக்கட்டணம் கிடையாது... மின்சார கார்களுக்கு விலக்கு!
இந்தியா முழுவதும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது.அதன்படி தூய்மையான மற்றும் பசுமையான இயக்கத்தை ஆதரிக்கும் புதிய முயற்சியாக, மகாராஷ்டிரா அரசு, மும்பையையும், நவி மும்பையையும் இணைக்கும் புகழ்பெற்ற கடல் பாலமான அடல் சேதுவில், சில வகை மின்சார வாகனங்களுக்கான சுங்கக் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஆகஸ்ட் 22, 2025 முதல், மின்சார கார்கள் மற்றும் மின்சார பேருந்துகள் பாலத்தின் வழியாக கட்டணமில்லாப் பயணங்களை மேற்கொள்ளலாம். இருப்பினும், மின்சார சரக்கு வாகனங்கள் இந்த சலுகையைப் பெற முடியாது.
இந்த கட்டண விலக்கு 21.8 கிலோமீட்டர் அடல் சேது வழித்தடத்தில் உள்ள சிவாஜி நகர் மற்றும் கவான் சுங்கச்சாவடிகளில் பொருந்தும் -
ஆரம்பத்தில், அடல் சேதுவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணங்கள் டிசம்பர் 31, 2025 வரை நிர்ணயிக்கப்பட்டன

சுங்கக் கட்டணத்தை பொறுத்தவரை மும்பை-புனே விரைவுச் சாலை மற்றும் சம்ருத்தி விரைவுச் சாலை உட்பட முக்கிய நெடுஞ்சாலைகளிலும் இந்த கட்டணச் சலுகைகளை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதே போல் பொதுப்பணித் துறையால் நிர்வகிக்கப்படும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார நான்கு சக்கர வாகனங்களுக்கு 50% தள்ளுபடி கிடைக்கும்.

இந்த சலுகைகளை வழங்குவதன் மூலம், மகாராஷ்டிரா சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் என கருதப்படுகிறது. மின்சார வாகன உரிமையாளர்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாமல், அதிகமான மக்கள் மின்சார இயக்கத்தை ஏற்றுக்கொள்ள ஊக்குவிப்பதும் இதன் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மின்சார வாகனங்களுக்கு கட்டணமில்லா வழித்தடத்தை வழங்கினாலும், அரசாங்கம் இந்த நன்மைகளை இன்னும் பெரிய பாதைகளில் விரிவுபடுத்தத் தயாராகி வருவதால், எதிர்காலத்தில் மேலும் பல அறிவிப்புக்கள் வெளியாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
