முன்னாள் கால்பந்து வீரர் மாரடைப்பால் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

 
செட்ரிக் ரூசல்

சமீபகாலமாக திடீர் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து தொடர்கதையாகி வருகிறது. விளையாடிக் கொண்டிருக்கும் போதே மரணம், நடனம் ஆடிக் கொண்டிருந்த போதே சரிந்து விழுந்து பலி, திருமண மேடையில் சரிந்து மரணம்  போன்ற நிகழ்வுகள் மக்கள் மனதில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் மாரடைப்பு என்பது பள்ளி மாணவர்கள் தொடங்கி கட்டுக்கோப்பாக உடலை வைத்திருக்கும் விளையாட்டு வீரர்கள் வரை யாரும் விதிவிலக்கல்ல என்பதை தான் சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு கூறி வருகின்றன. 

செட்ரிக் ரூசல்

முன்னாள் கால்பந்து வீரர் செட்ரிக் ரூசல் இவர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு  வயது 45. இவரது திடீர் மரணம் கால்பந்து ரசிகர்கள் சக விளையாட்டு வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செட்ரிக் ரூசல்  1994ல் தொடங்கி   2010 வரை பல கிளப்களில் விளையாடியுள்ளார். 2015ல் தனது 37வது வயதில் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக ரூசல் அறிவித்தார். அதன் பிறகு   ரியல் எஸ்டேட் தொழிலில் தம்மை ஈடுபடுத்தி பிசியாக்கி கொண்டார். இந்நிலையில் மாரடைப்பால் ரூசல் 45 வயதில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

செட்ரிக் ரூசல்
பெல்ஜியம் அரசு, செட்ரிக் ரூசலின் குடும்பத்தினர், உறவினர்கள்,  நண்பர்களுக்கும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளது.  செட்ரிக் ரூசல் மோன்ஸ் அணிக்காக விளையாடிய   76 போட்டிகளில் 34 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   அதே போல் செட்ரிக் ரூசல். இவர் La Louviere அணிக்காக 107 போட்டிகளில் 49 கோல்கள் அடித்தவர்.  இவரது மறைவிற்கு பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web