போட்றா வெடிய... நடிகர், இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரனுக்கு ஜூன் 9ம் தேதி திருத்தணியில் திருமணம்!

 
பிரேம்ஜி
தமிழ் சினிமாவில் முதிர்கன்னியாக வலம் வரும் த்ரிஷா துவங்கி, அனுஷ்கா, சிம்பு, விஷால் எல்லாம் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் கடத்தி வரும் நிலையில், திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறார் பிரேம்ஜி அமரன். வரும் ஜூன் 9ம் தேதி திருத்தணியில் பிரேம்ஜிக்கு திருமணம். முரட்டு சிங்கிள் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக முரட்டு சிங்கிளாக வலம் வருபவர் பிரேம்ஜி. பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான இவர், அவரது அனைத்து படங்களிலும் தவறாமல் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பல பெரிய ஹீரோ படங்களில் துணை நடிகராகவும், பாடகராகவும் பணிபுரிந்து வருகிறார். "பிரேம்ஜிக்கு திருமணம்" என்று கேட்டதும் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் இவரை எப்போது தான் கல்யாணம் பண்ண போறீங்கள் என கேள்வியால் வாட்டி வதைத்து வந்தனர். இந்நிலையில், இந்து என்ற பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களது திருமணம் வரும் 9ம் தேதி திருத்தணியில் நடைபெற உள்ளது. இவர்களது திருமண பத்திரிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பல வருடங்களாக தனிமையில் இருந்து வரும் இவருக்கு 45 வயதில் திருமணம் நடக்க உள்ளது.இந்த வயதிலும் இவர் திருமணம் செய்வதை பலரும் கேலி செய்து வருகின்றனர்.ஆனால் நல்ல உள்ளம் கொண்ட சிலர் பிரேம்ஜிக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web