போட்றா வெடிய... நாளை முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்!

 
கல்லூரி பெண்கள் யுஜிசி

பள்ளி கல்வியை முடித்துள்ள மாணவ, மாணவிகள் தங்களது வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கின்றனர். நாளை முதல் தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை துவங்குகிறது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து, மாணவர் சேர்க்கையும் முடிவடைந்த நிலையில், மீண்டும் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை முதல் சேர்க்கை துவங்குகிறது. 

யுபிஎஸ்சி தேர்வு விடுமுறை மாணவர்கள் கல்லூரி

அதன்படி ஜூலை 3ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில், ஜூலை 5ம் தேதியுடன் விண்ணப்பங்களீல் பெறப்பட்டது.  இந்நிலையில், நாளை ஜூலை 8ம் தேதி முதல் மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வேறோரு பாடப்பிரிவில் மாற விரும்பினால் அந்த துறையில் காலியிடம் இருப்பின் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரி

ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை பெற்று துறையில் இணையாத மாணவர்களின் இடங்களையும் நிரப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடத்தி முடிக்கப்பட்ட கலந்தாய்வுகளில் 164 அரசு கலை கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 63 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web