கடன் கொடுத்ததை பயன்படுத்தி பெண்களிடம் எல்லைமீறல்.. நாதக நிர்வாகி அதிரடியாக கைது!
![சக்திவேல்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/5022312726de193ca2b68411f797e8ff.jpg)
சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப முகாமின் மாநில செயலாளராக உள்ளார். இவர் கிண்டியில் உள்ள மதுவங்கரையில் சொந்தமாக ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக சென்னையைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்
.
இவர் தனது குடும்பத்தின் அவசர தேவைக்காக சக்திவேலிடம் இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதையடுத்து இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளம் பெண்ணை சக்திவேல் உல்லாசத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் வர மறுத்ததால், தான் கொடுத்த இரண்டு லட்சத்தை உடனே திருப்பி தர வேண்டும் என கூறி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புகாரின் பேரில் சக்திவேல் கைது செய்யப்பட்டு நேற்று இரவு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த பெண்ணிடம் மட்டுமின்றி அவரது நிறுவனத்தில் பணிபுரியும் சில பெண்களிடமும் சக்திவேல் அத்துமீறி நடந்து வந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ள போலீசார், சக்திவேலின் செல்போன் மற்றும் லேப்டாப்பை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அவரால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தயங்காமல் புகார் அளிக்கலாம் என அந்நிறுவனத்தின் பெண் ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், உரிய நேரத்தில் திருப்பி செலுத்தாததால், எத்தனை பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!