சிதறிய கட்டிடங்கள்.. மரண ஓலம்... பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு.. மேலும் பலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

 
பட்டாசு விபத்து

அந்த இடத்தில் பட்டாசு ஆலை முழுவதுமாக தரைமட்டமாகி இருக்கிறது. திரும்பும் இடங்களில் எல்லாம் சிதறிய பட்டாசுகளும், மரண ஓலமுமாக இருக்கிறது. நேற்றைய பொழுது அத்தனை சந்தோஷமாக விடியவில்லை. வெடிவிபத்து நிகழ்ந்து அடுத்த 3 தினங்களுக்குள் மற்றொரு விபத்து நேர்ந்துள்ளது. ஆலையின் 7 அறைகளுமே வெடிவிபத்தில் சிதறி இருக்கிறது.  பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 7 அறைகளில் நேற்று தொழிலாளர்கள் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வெடி விபத்து

இந்த தீ விபத்து அடுத்தடுத்து உள்ள 7 அறைகளுக்கும் பரவியதில் அங்கிருந்த பட்டாசுகள் மற்றும் வெடி பொருட்கள் வெடித்து சிதறியது. இதனால் பல மீட்டர் உயரத்துக்கு புகைமண்டலம் பரவியது. பணியில் 16 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், 10 பேர் பலியாகி உள்ளனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறி வந்ததால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. உள்ளிருந்தவர்களை மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ்

படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று நிவாரண உதவிகள் அறிவிக்கப்படும் என்று முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வருடந்தோறும் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளர்கள் உயிரிழப்பதும், அரசு நிவாரண தொகை அறிவிப்பதும் தொடர்கதையாக தானே இருந்து வருகிறது. நிவாரண தொகையை வழங்குவதற்காக மட்டுமா அரசு இயங்குகிறது. இந்த விபத்துகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண எந்த அரசுமே இதுவரை முயற்சி செய்யவில்லையே? எத்தனை லட்சங்களைக் கொடுத்தாலும் போன உசுரை திரும்ப தர இயலுமா? கண்ணீர் மட்டுமே ஏழைகளின் நிரந்தர சொத்தாக இருந்து வருவது தான் சாபக்கேடு போல

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web