பட்டாசு ஆலையில் வெடி விபத்து... உரிமையாளா் உயிரிழப்பு!

 
வெடி விபத்து
 

 


எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆலை கட்டடம் இடிந்து தரைமட்டமானது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கருப்பூர் இனாம் அருணாசலபுரம் கிராமத்தில், சிவகாசி விருசநத்தம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (57) , கண்ணபிரான் ஆகியோருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. நேற்று பட்டாசு ஆலையில் வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பேன்சி ரக பட்டாசுகள் திடீரென வெடித்தன. இதையடுத்து, தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பியோடினர். 

பட்டாசு விபத்து

வெடி விபத்தால் ஆலை கட்டடம் முழுவதும் தரைமட்டமானது. விபத்தின் போது உள்ளே இருந்த ஆலையின் உரிமையாளர் கந்தசாமி உயிர் தப்பிப்பதற்காக ஓட முயற்சித்ததில் இரும்பு கம்பி வேலிகளில் சிக்கி விழுந்து உடல் கருகி உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கந்தசாமியின் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவில்பட்டி, விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன், எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா, டி.எஸ்.பி. அசோகன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

விபத்து

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஒரு சில அரசுத் துறைகளில் மட்டும் அனுமதி வாங்கிக் கொண்டு பட்டாசு ஆலையை முழு அளவில் இயக்கி வந்தது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

 

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?