நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள்... பயணிகள் கடும் அவதி!!

 
ரயில்

இன்று சனிக்கிழமை தனியார் அலுவலகங்களில் வார இறுதி வேலை நாள். அரசு அலுவலகங்களி இன்று முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை. வார விடுமுறை மற்றும் ஆயுத பூஜையையொட்டி  4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் இருந்து  தங்களது பயணிகள்  சொந்த  ஊர்களுக்கு  செல்லத் தயாராகி பேருந்துகள் ரயில்கள் கார்கள் மூலம் பயணித்து வருகின்றனர்.  

ரயில்


இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் மற்றும் சென்னை புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சங்கமித்ரா விரைவு ரயில்


 இதேபோல் கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 11.20 மணிக்கு புறப்படும் ரயில், சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு இரவு 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் இன்று அக்டோபர்  21ம் தேதி  ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பயணிகளின் வசதிக்காக சென்னை மூர்மார்கெட்-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இன்று இரவு 10.45, 11.20 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு  ரயில்வே அறிவித்துள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web