முன்னாள் ராணுவ வீரர் கரடி தாக்கி பலி!

 
பெருமாள்

தமிழகத்தில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு  மேற்கு தொடர்ச்சி மலை  கிராமமான  சிதம்பரம் விலக்கு பகுதியில் வசித்து வருபவர் சென்றாய பெருமாள். இவருக்கு வயது 60.  இவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர்.  தனது மனைவியோடு சிதம்பரம் விளக்கு பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்த  நிலையில்  நேற்று இரவு வீட்டிற்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பி  செல்லும்போது திடீரென மலைப்பகுதியில் இருந்து வந்து தாக்கிய கரடி ஒன்று கடித்து தாக்கியுள்ளது.

பெருமாள்


இதில் கண்,முகம், தலை, மார்பு உட்பட  உடல் முழுவதும் படுகாயம் அடைந்து சென்றாய பெருமாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை காலையில் தோட்டத்து வேலைக்கு   சென்றவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற மயிலாடும்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

பெருமாள்

அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு   அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம்  குறித்து காவல்துறையினர் மற்றும் கண்டமனூர் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் ராணுவ வீரர் கரடி தாக்கி பலியான சம்பவம் ஆண்டிபட்டி கடமலைக்குண்டு மலை கிராம பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும்  ஏற்படுத்தி உள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web