செம... குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கான நேரம் நீட்டிப்பு!

 
குற்றாலம்

 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஒரு சில நேரங்களில் நீர்வரத்து வேகமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி  குளிக்க தடை விதிக்கப்படுவதுண்டு.

குற்றாலம்

 நீர்வரத்து சரியான பின் குளிக்க அனுமதிக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி நீட்டிக்கப்பட்டு  இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குற்றாலம்

இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளின் தொடர்  கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர் இந்த உத்தரவை பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web