ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி ரபி சங்கர் பதவிக்காலம் நீட்டிப்பு!

 
ரபி சங்கர்

 இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் டி ரபி சங்கர். இவரது பதவிக்காலம் மே 3 ,2024ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இவரது பதவிக்காலம்  ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  ரபி சங்கர், பிபி கனுங்கோ ஓய்வு பெற்றதன் அடிப்படையில்  மே 2021ல் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.ஆர்பிஐயில் ரபி சங்கர்  அந்நிய செலாவணி, நாணயம் மற்றும் ஃபின்டெக் துறைகளுக்குப் பொறுப்பாக உள்ளார். அவர் மே, 2021 ல் 3 ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

ரபி சங்கர்

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் டி ரபி சங்கரை, மே 3, 2024 முதல் ஓராண்டு காலத்திற்கு மீண்டும் நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கியில்  அவர் இந்திய நிதி தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகளின்  தலைவராகவும், ReBITன் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும், IDRBT ன் ஆளும் குழுவின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.  

ரபி சங்கர்
1990 ம் ஆண்டு ரிசர்வ் வங்கியில் சேர்ந்து மத்திய வங்கியில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்து வந்த  அவர், துணை ஆளுநராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் நிர்வாக இயக்குநராக,  பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, ஃபின்டெக் மற்றும் ரிசர்வ் வங்கியின் இடர் கண்காணிப்புத் துறைகளை  கவனித்து வந்தார். இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web