செம... வியாழக்கிழமைகளில் கூடுதல் வந்தே பாரத் ரயில் சேவை... பயணிகள் உற்சாகம்...!!

இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி- சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை செப்டம்பர் 24 ம் தேதி தொடங்கப்பட்டது. வாரத்தில் 6 நாட்களில் செவ்வாய்க்கிழமை தவிர வந்தே பாரத் ரயில் திருநெல்வேயில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50க்கு சென்னை வந்தடையும்.
மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடைகிறது. சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ரயில் நிலையங்களில் மட்டுமே வந்தே பாரத் ரயில் நின்று செல்லும்
இந்நிலையில் நவம்பர் 16 முதல் டிசம்பர் மாதம் 28 வரை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் கூடுதலாக வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் மதியம் 2.15-க்கு திருநெல்வேலியை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!