10ம் வகுப்பு மறுதேர்விலும் தோல்வி...வேலூரில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

 
சுரேஷ் ராஜா

மாணவர்களே... தற்கொலை என்பது எதற்குமே தீர்வாகாது. தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு, முயற்சி செய்து சாதிக்க பாருங்க. அது போன்ற எண்ணங்கள் ஏற்பட்டால், உங்களுக்கு நெருக்கமானவங்க, பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்களிடம் கலந்து பேசுங்க. சமீபத்தில் வெளியான 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், ஏற்கெனவே ஒரு பாடத்தில் தேர்ச்சியடையாத நிலையில், மறுத்தேர்விலும் தோல்வியடைந்ததால் வேலூரில், 10ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் வசிப்பவர் சுமதி. கணவரை இழந்த சுமதி, அந்த பகுதிகளில் நடைப்பெறுகிற கட்டிடங்களில் வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இவரது மகன் சுரேஷ் ராஜா (16). கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தார். அதையடுத்து அவர் தோல்வி அடைந்த பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்காக தயாராகி வந்தார்.

அந்த சமயத்தில் கேட்டரிங் சர்வீஸ் வேலைக்கு அவ்வப்போது சென்று வந்து கொண்டிருந்த நிலையில் சுரேஷ் ராஜா கடந்த மாதம் நடைப்பெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, மறுதேர்வு எழுதினார். அதன் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், சுரேஷ் ராஜா மறுதேர்விலும் தேர்ச்சி அடையவில்லை.

Suicide

இதனால் மனமுடைந்த சுரேஷ்ராஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைச் செய்து கொண்டார். அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த வாலிபர்கள் இதைக் கண்டு விரிஞ்சிபுரம் போலீசாருக்கும், அவருடைய அம்மா சுமதிக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதையடுத்து வேலைக்கு சென்ற சுமதி உடனடியாக வீட்டிற்கு வந்து சுரேஷ் ராஜாவின் உடலை பார்த்து கதறி அழுதார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விரிஞ்சிபுரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Virinchipuram PS

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். எஸ்.எஸ்.எல்.சி. மறுதேர்வில் தோல்வியடைந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web