கணவர் பெயரில் போலி சான்றிதழ்.. 85 லட்சத்தை ஆட்டைய போட்ட காதல் மனைவி அதிரடியாக கைது!

 
கெஜலட்சுமி

சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், 8 ஏக்கர் தென்னந்தோப்பை ரூ.85 லட்சத்துக்கு விற்ற காதல் மனைவியை போலீஸார் கைது செய்தனர். சென்னை ஆலந்தூரைச் சேர்ந்தவர் ரகுவீரபாண்டியன் (53). இவர் அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றியபோது, ​​அதே நிறுவனத்தில் பணியாற்றிய சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த கெஜலட்சுமி (49) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கணவன் மனைவி சண்டை

தற்போது இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஓரிரு ஆண்டுகளுக்கு முன், வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டை அடுத்த சின்னதாமன்சேரி பகுதியில், 8 ஏக்கர் 11 சென்ட் தென்னந்தோப்பு நிலத்தை, தம்பதியர் கூட்டாக வாங்கியுள்ளனர். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். ரகுவீரபாண்டியன் அமெரிக்காவில் தொடர்ந்து பணியாற்றினார். கெஜலட்சுமி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கெஜலட்சுமி அமெரிக்காவில் ரகுவீரபாண்டியன் பெயரில் போலியான வாழ்நாள்சான்றிதழ் பெற்றுள்ளார். பர்ணாம்பட்டு சின்ன தாமன்சேரியில் 8 ஏக்கர் 11 சென்ட் தென்னந்தோப்பை ரகுவீரபாண்டியனுக்குத் தெரியாமல் ரூ.85 லட்சத்துக்கு விற்றதாகவும் கூறப்படுகிறது.

இளம் நடிகர் கைது

சில மாதங்களுக்கு முன் இந்தியா திரும்பிய ரகுவீரபாண்டியன், இதுபற்றி அறிந்து அதிர்ச்சியடைந்து வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் பாபு ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி சாரதி மேற்பார்வையில் விசாரணை நடத்தினார். மேலும் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த கெஜலட்சுமியை இன்ஸ்பெக்டர் பாபு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web