பகீர்.. கிணறு வெட்டும் பணியின் போது விபரீதம்.. 3 பணியாளர்கள் பரிதாப பலி!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அருங்குறிகை கிராம எல்லையில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கிணறு தோண்டும் பணி கடந்த பத்து நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், நரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ஹரி கிருஷ்ணன் (40), பெருங்குரிக்கை கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் தணிகாசலம் (48), நெய்வானை கிராமத்தைச் சேர்ந்த தாஸ் மகன் முருகன் (38) ஆகியோர் கிணறு தோண்டிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், மூவரும் கிணற்றில் பிணமாக கிடந்தனர். இது குறித்து கிராம மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு வந்த விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் திருவெண்ணெய்நல்லூர் போலீஸார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.

எனினும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், கயிறு அறுந்து கிணற்றில் விழுந்து இறக்கவில்லை எனவும் உயிரிழந்தவரின் உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின், உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
