பகீர்.. ஹோட்டலுக்குள் நுழைந்து உணவு சாப்பிட்ட பூனை.. அலட்சியமாக இருந்ததால் கடைக்கு சீல்!

 
நெல்லநாடு ஹோட்டல்

உணவு சுகாதாரம் என்பது அறுவடை செய்வது முதல் நம் உண்ணும் உணவாக வரும் வரை உள்ள ஒரு தொடர்சங்கிலி. இதில் ஒவ்வொரு புள்ளியும் மிக முக்கியமானது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், காலாவதியான அல்லது அழுகிய பொருட்களைக் கொண்டு உணவைத் தயாரிக்கும் போது, ​​​​உணவு எவ்வாறு உடலுக்குத் தேவையற்றதாகி உடல் சேதத்தை ஏற்படுத்துகிறதோ, அதேபோல், விலங்குகள் சாப்பிட்டு விட்டுச்செல்லும் உணவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதை சிலர் அலட்சியப்படுத்துவது வருத்தம் அளிக்கும் ஒன்றாகும்.

உணவு

இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரம் அருகே நெல்லநாடு என்ற இடத்தில் செயல்பட்டு வரும் ஹோட்டல் முன்புறம் கண்ணாடி பெட்டி உள்ளது. அதில் சில உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு பூனை அதை சாப்பிடுகிறது. இதை அந்த வழியாக சென்ற 2 பேர் செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் ஹோட்டலுக்கு சென்று ஆய்வு நடத்தி சீல் வைத்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web