பகீர்.. 2 நாட்களில் மொத்தம் ரூ.110 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்!

 
குஜராத் போதைப்பொருள்

குஜராத்தில் போதைப்பொருள் கடத்தல் குறித்த ரகசிய தகவலையடுத்து, முந்த்ரா சுங்கத் துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் கடந்த சனிக்கிழமை 26.26 லட்சம் டிராமடோல் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் நேற்று நடந்த சோதனையில் ஏற்றுமதிக்காக வைத்திருந்த மேலும் 42.24 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 நாட்களில் மொத்தம் ரூ.110 கோடி போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுங்க இலாகா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 110 கோடி மதிப்பிலான (8 லட்சம் டிராமடோல் மாத்திரைகள்) சர்வதேச சந்தையில் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், அகமதாபாத்தில் உள்ள ஆளில்லா குடோனில் இருந்து குறிப்பிட்ட அளவு டிராமடோல் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை ரூ.9 கோடி மதிப்புள்ள 30,000 யாபா மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சம்பவத்தில் தோலாய் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சப்தகிராமம் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் அலீம் (வயது 42) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web