பகீர்... போதையில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்கள்... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

 
போதை


 
மத்தியப் பிரதேச மாநிலத்தில்  சத்தர்பூர் மாவட்டத்தில்   பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. போதையில் இருந்த இருவர்  பள்ளிக்குள் நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். அவர்கள்   ஆசிரியரிடம் பணம் கேட்டு துன்புறுத்தியதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.   

பணம் கொடுக்க மறுத்ததால் ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அத்துடன்  மாணவர்களையும் பயமுறுத்தினர். இதில் கற்பித்தல் பணிகளில் பெரும்  குழப்பம் ஏற்பட்டது. அப்போது  சில பெண்கள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். இச்சம்பவம் குறித்த  வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.
 போதை
இதையடுத்து, அந்த பள்ளியின் ஆசிரியர் வைபவ் குமார் சாஹு கல்வித்துறையிடம்  புகார் அளித்துள்ளார். அந்த புகாரில்  பள்ளி வளாகத்திற்குள் குடிபோதையில் நுழைந்ததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை  காரணமாகக் காட்டி, சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அந்த புகாரில் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து  தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?