பகீர்.. . போலி ரசீது... 5 ஸ்டார் ஹோட்டல்களில் சொகுசு வாழ்க்கை நடத்திய இளைஞர் ! ...

 
சுதிர்

  
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை பூர்வீகமாக கொண்டவர் 25 வயது சுதிர். இவர்  கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை அவினாசியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில்  ஆன்லைன் மூலம் தான் பணம் செலுத்தி அறையை புக் செய்ததாக கூறினார். இதற்கான ரசீதை கேட்கவும் போலியான பில்லை காட்டியதில் அவரை  விடுதியினர் தங்க அனுமதித்தனர். பின்னர் மறுநாள் விடுதியை காலி செய்து செல்ல முயற்சித்த போது உணவக  ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.  

சுதிர்

அவர் போலி பில்லை காட்டி தான் ஏற்கனவே பணம் செலுத்தி விட்டதாக கூறினார்.   மீண்டும் பரிசோதனை நடத்தியதில் அது போலியான பில் என்பது தெரியவந்தது.
உடனடியாக விடுதி ஊழியர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீஸார் சுதிரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் சுதிர் பொறியியல் பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தியதும், இந்தியா முழுவதும் உள்ள தாஜ், லீ மெரிடியன் என 5ஸ்டார் நட்சத்திர விடுதிகளில் இவ்வாறு போலி பில் கொடுத்து சொகுசாக தங்கி இருந்ததை ஒப்புக் கொண்டார்.

போலீஸ்

இது போல போலி பில்லை காட்டி விடுதிகளில் தங்கியதாக மதுரை போலீஸார் இரண்டு முறையும், புவனேஷ்வர் போலீஸார் ஒரு முறையும் என  பல்வேறு மாநிலங்களில்  போலீஸார் சுதிரை கைது செய்ததும் தெரியவந்தது.  உழைப்பின்றி சொகுசாக பல்வேறு வசதிகளை அனுபவிக்கவும், உணவு சாப்பிடவும் இந்த மாதிரியாக போலி பில்லை காட்டி தங்கியதை வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் பேரில்  சுதிரை கைது செய்து  போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  சுதிர் தங்கியிருந்த  விடுதியில் யாரிடமும் பணம் கடனாக பெற்றுள்ளாரா என்பது  குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web