பகீர்... சென்னையில் மட்டுமே 28,674 பேர் மரணம்.. காற்று மாசு குறித்து பகீர் ஆய்வறிக்கை!

 
காற்று மாசுபாடு

உலக நாடுகளை கொரோனா உலுக்கு எடுத்த பிறகு தான் இயற்கை மீது மனிதனுக்கு அதிகளவில் பயமும், ஆர்வமும் வரத் துவங்கியது. ஆனாலும், நம் வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்கிற நினைப்பில், வீட்டைச் சுற்றி கழிவு நீர் தெருவில் வடிந்தாலும் பரவாயில்லை என்பதைப் போல தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் காற்றில் மாசு சதவிகிதம் அதிகரித்து வருகிறது.

தற்போது மிக மோசமான நிலையில், டெல்லியும், பெங்களூருவும் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், பெங்களூருவில் அடர்த்தியான மரங்கள் காற்றை சலவைச் செய்கிறது. டெல்லியில் அப்படியில்லை. அதனால், வருடந்தோறும் டெல்லியில் காற்று மாசு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இந்த காற்று மாசு அதிகரிப்பால் கடந்த 12 ஆண்டுகளில் சென்னையில் மட்டுமே சுமார் 28,674 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை  ”தி லான் செட்” ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் இந்தியாவை பொறுத்தவரை தலைநகர் டெல்லியில் தான் காற்று மாசுபாடு அதிகம்.

டெல்லி மாசு காற்று வாகனம் பனி

ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாடு காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி 2008ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையில் டெல்லியில் அதிகபட்சமாக 95,719 பேரும், கொல்கத்தாவில் 45,458 பேரும், மும்பையில் 30,544 பேரும், அகமதாபாத்தில் 28,650 பேரும் காற்று மாசு பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

மூச்சு திணறும் தமிழகம்!! முக்கிய நகரங்களில் அதிகரித்த காற்று மாசு!!

காற்று மாசு காரணமாக உயிரிழப்பு, சுவாசம், இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் நரம்பியல் பாதிப்பு குறைபாடுகள் உட்பட பலவிதமான உடல் ஆரோக்கியத்திற்கு எதிரான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web