பகீர்... மீண்டும் நிர்பயா சம்பவம்... ஓடும் பேருந்தில் 14 வயது சிறுமி கடத்தி பலாத்காரம்!

 
அனில் மேக்வால்

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய டெல்லி நிர்பயா சம்பவம் போல ராஜஸ்தானில் ஓடும் பேருந்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை கடத்தி இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் மற்றும் ஜெய்சல்மேர் சென்றுக் கொண்டிருந்த ஸ்லீப்பர் பேருந்து ஒன்றில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி நடந்துள்ள இந்த சம்பவம் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாலியல் வன்கொடுமை


ராஜஸ்தான் மாநிலம், ரத்தன் நகரில், தாதாரியா கிராமம் தரம்ஷாலாவைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவியை, அதே கிராமத்தைச் சேர்ந்த அனில் மேக்வால்(21) என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக போதைப்பொருள் ஜூஸ் ஊற்றி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். போதைப்பழக்கத்திற்கு அடிமைப்படுத்திய அனில் மேக்வால், சிறுமியை நிர்வாண நிலையில், புகைப்படங்களை எடுத்துள்ளார்.
அதன் பின்னர், சிறுமியின் ஆபாசப் புகைப்படங்களை வெளியிடப் போவதாக மிரட்டி, கடந்த ஏப்ரல் 28ம் தேதி சிறுமியை ஸ்லீப்பர் பேருந்தில் கடத்திச் சென்றுள்ளார். அப்போது ஓடும் பேருந்தில் சிறுமியை அனில் மேக்வால், இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பாலியல்


இது குறித்து ரத்தன்நகர் போலீசார் ஜெய்பிரகாஷ் கூறுகையில், 8ம் வகுப்பு மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளார். ஸ்லீப்பர் பேருந்தில் சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிறுமியின் புகாரின் அடிப்படையில் அனில் மேக்வால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் அடிப்படையில், அனில் மேக்வால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web