பகீர்... எவ்வளவோ கெஞ்சியும் கேட்கலை... காதலிக்க மறுத்த அஞ்சலியை வீடு புகுந்து குத்திக் கொன்ற காதலன்!

 
அஞ்சலி

எவ்வளவோ சொல்லியும் கேட்கலை.. நிறைய தடவை கெஞ்சியும் பார்த்தாச்சு... தன்னுடைய ஒரு தலைக் காதலை ஏற்றுக் கொள்ளாமல், தொடர்ந்து அஞ்சலி காதலை நிராகரித்ததால் கோபத்தில் கிரிஷ், வீடு புகுந்து காதலி அஞ்சலியைக் குத்திக் கொலை செய்து அதிர வைத்திருக்கிறான்.

நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அஞ்சலி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி கிரீஷ் வீட்டிற்குள் நுழைந்து கத்தியால் அஞ்சலியைக் குத்தினார்.

இது குறித்து வெளியான தகவலின்படி,தெலுங்கானாவில் கல்லூரி ஒன்றில் நேஹா எனும் மாணவியை ஹிரேமத் குத்திக் கொன்ற வழக்கைக் குறிப்பிட்டு, அஞ்சலியின் குடும்பத்தினரை கிரீஷ் மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து அஞ்சலியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

கொலைக்கு முன், நேஹா ஹிரேமத்தின் சோகமான கதியைக் குறிப்பிட்டு, "நீ என்னுடன் வராவிட்டால் நிரஞ்சன் ஹிரேமத்தின் மகளுக்கு நடந்ததை உனக்கு நான் செய்வேன்" என்று கிரீஷ் அஞ்சலியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அஞ்சலியின் பாட்டி கங்கம்மா, கிரிஷின் மிரட்டல் குறித்து போலீசில் புகார் அளித்தும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏற்கெனவே கிரீஷ் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது கிரிஷ் மீது பெண்டிகேரி காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் பிவிபி கல்லூரி வளாகத்தில் ஃபயாஸ் என்பவரால் நேஹா ஹிரேமத் கொல்லப்பட்டது, லவ் ஜிஹாத் குற்றச்சாட்டுகள் மற்றும் நாடு முழுவதும் பரவலான எதிர்ப்புகளுடன் சீற்றத்தையும் சர்ச்சையையும் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web