பகீர்... பள்ளியில் ராகிங் கொடுமை... 10ம் வகுப்பு மாணவன் கத்தரிக்கோலால் தாக்கப்பட்ட கொடூரம்!

 
பகீர்... பள்ளியில் ராகிங் கொடுமை... 10ம் வகுப்பு மாணவன் கத்தரிக்கோலால் தாக்கப்பட்ட கொடூரம்!

கல்லூரி மாணவர்களுக்கிடையே நீடித்து வரும் ராகிங் கலாச்சாரம் தற்போது பள்ளி மாணவர்களுக்கிடையேவும் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ராகிங் என்ற பெயரில் பள்ளி மாணவனை, சக மாணவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

வயநாடு மூலங்காவே அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் சபரிநாத் (15) என்பவர் சக மாணவர்களால் கத்திரிக்கோலால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். சபரிநாத்தின் முகத்தில் கத்தரிக்கோலால் சக மாணவர்கள் கொடூரமாக குத்தியுள்ளனர். அவரது காதுகளிலும் லேசான காயம் ஏற்பட்டது. 

சபரிநாத்துடன் பேசுவதாகக் கூறி அவரது வகுப்பைச் சேர்ந்த சீனியர் மாணவர்கள் சிலர் தனியே அழைத்துச் சென்று  இப்படி கொடூரமாக கத்திரிக்கோலால் தாக்குதல் நிகழ்த்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சிகிச்சையில் இருந்த பத்தேரி தாலுகா மருத்துவமனையில் இருந்து சபரிநாத்தை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சிகளும் நடந்தன. மேலும், சபரிநாத்துக்கு உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவமனை நிர்வாகம் பாரபட்சமாக நடந்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். போலீசார் மருத்துவமனைக்கு வந்து சம்பவம் குறித்து தகவல் சேகரித்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web