பகீர்.. கேஸ் கட்டர் மூலம் ஏ.டி.எம் உடைத்து ரூ.25 லட்சம் அபேஸ்.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

 
பஞ்சாப் ஏ.டி.எம் கொள்ளை

பஞ்சாப் மாநிலம் பக்வாரா நகரில் உள்ள பக்வாரா-பலாரி சாலையில் உள்ள பொதுத்துறை வங்கி ஏடிஎம்  அமைந்துள்ளது. இந்த ஏடிஎம்மில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் சுமார் ரூ.25 லட்சத்தை திருடிச் சென்றனர். ஏடிஎம் இயந்திரத்தை காஸ் கட்டர் மூலம் உடைத்த கொள்ளையர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பினர்.

ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் உடைக்கும் போது வெப்பம் காரணமாக சில ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசமானது. கொள்ளையர்கள் எரிந்த பணத்தை அங்கேயே வைத்துவிட்டு பணத்துடன் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web