பகீர்... நடுரோட்டில் அரசு பேருந்தில் இருந்து கழன்று ஓடிய டயர்!

 
அரசு பேருந்து

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அரசு பேருந்துகளின் பராமரிப்பு சீர்கேடு காரணமாக தொடர்ந்து விபத்துகள் நடைப்பெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகம் முழுவதும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்த பின்னரும் தொடர்ந்து நடுரோட்டில் அரசு பேருந்துகள் பல்லிளித்து விபத்தில் சிக்குவது தொடர்கதையாக நடந்து வருகிறது. 

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நடுரோட்டில் ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன் சக்கர சக்கரம் கழன்று சாக்கடையில் விழுந்த நிலையில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் காயம் இன்றி தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பேருந்து

இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து வேப்பன்வலசிற்கு நகரப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர்.  வேப்பன்வலசு அருகே சென்று கொண்டிருந்தபோது, பேருந்தில் இருந்த முன் இடதுபுற சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியது. அந்த சக்கரம் அருகில் இருந்த பெரிய சாக்கடையில் விழுந்தது. திடீரென சக்கரம் கழன்றதால் பேருந்து கடுமையாக தடுமாறியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் கூச்சலிட்டு அலறினர். பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை உடனடியாக நிறுத்தியதால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

பேருந்து

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று பழுதான பேருந்தை ஆய்வு செய்தனர். பின்னர் பழுது நீக்கும் பேருந்து வரவழைக்கப்பட்டு, பழுதான பேருந்து பணிமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதனிடையே, சக்கர கழன்று ஓடிய போது, அப்பகுதியில் குழந்தைகள், கால்நடைகள் இருந்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதிகாரிகள், பேருந்துகளை முறையாக ஆய்வு செய்து, பழுதின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web