பகீர்... 3 குழந்தைகளுடன் கால்வாயில் குதித்து மனைவி தற்கொலை!

 
3 குழந்தைகளுடன்

கணவனுடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தனது 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கால்வாயில் குதித்து மனைவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம், பண்டா மாவட்டம், ரிசெளரா கிராமத்தில் வசித்து வந்தவர் ரீனா(30). இவரது கணவர் அகிலேஷ். இவர்களுக்கு ஹிமான்ஷு(9), அன்ஷி (5), மற்றும் பிரின்ஸ் (3) என்று மூன்று குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், கணவர் அகிலேஷுடன் அடிக்கடி கருத்து வேறுபாடும், வாக்குவாதமும் எழுந்ததால், தனது 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கால்வாயில் குதித்து ரீனா தற்கொலைச் செய்துக் கொண்டார். 

ஆறு கடல்

வழக்கம் போல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரீனாவுக்கும் அவரது கணவர் அகிலேஷுக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு தனது குழந்தைகளுடன் ரீனா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அடுத்த நாளான சனிக்கிழமை ரீனாவையும், குழந்தைகளையும் காணாததைத் தொடர்ந்து அகிலேஷின் பெற்றோர் நான்குப் பேரையும் தேடத் தொடங்கினர்.

அப்போது கால்வாய் அருகே ரீனா மற்றும் அவரது குழந்தைகளின் உடைகள், வளையல்கள், செருப்புகள் மற்றும் பிற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.  இதனைத் தொடர்ந்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, காணாமல் போனவர்கள் கால்வாயில் குதித்திருக்கலாம் எனச் சந்தேகித்தனர். நீண்ட தேடலுக்குப் பிறகு, ரீனா மற்றும் அவரது மூன்று குழந்தைகளின் உடல்கள் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. நான்கு பேரின் உடல்களும் துணியால் ஒன்றாகக் கட்டப்பட்டிருந்தன என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் அகிலேஷை கைது செய்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?